இத்திரைப்படத்தை “அன்னை ஃபிலிம் பேக்டரி” என்ற நிறுவனம் மூலம் ஆண்டனி தயாரிக்கிறார். இவர் AVM & Studiogreen நிறுவனங்களிலும், இயக்குநர் சுசீந்திரன் படங்களிலும் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தவர்.
இத்திரைப்படத்தில் சந்தீப் மற்றும் விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதில் சந்தீப்க்கு ஜோடியாக “கிருஷ்ணகாடி வீர பிரேமாகாதா” என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹரீன் (Mehreen) இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
‘வெண்ணிலாக் கபடிகுழு’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் J.லஷ்மண் M.F.I. மீண்டும் இயக்குநர் சுசீந்திரனுடன் இணைந்துள்ளார்.
முதன்முறையாக சண்டை பயிற்சியாளர் அன்பறிவ் சுசீந்திரனுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.
வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி பாடல்களுக்கு D.இமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பு காசி விஸ்வநாதன், கலை சேகர், நடனம் ஷோபி.
இப்படம் ஒரு family & action entertainer . 80% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.