ராஜதந்திரம் படம் மூலம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற நடிகர் வீரா தற்போது நடித்து வரும் “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிந்து, வெளிவரும் தருவாயில் உள்ளது. பல்வேறு விளம்பர படங்களை தயாரித்து இயக்கி விளம்பர உலகில் பிரசித்தி பெற்ற அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், ஆரா சினிமாஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
வீரா கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் குக்கூ பட நாயகி மாளவிகா நாயர். இவர்களுடன் பசுபதி, ரோபோ ஷங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், சேத்தன், ஷா ரா, ஆகியோர் நடிக்க அறிமுக இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், madly ப்ளூஸ் இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், பிரவீன் ஆன்டனி படத்தொகுப்பில், டான் அசோக் வசனத்தில், எட்வர்ட் கலைமணி கலை வண்ணத்தில், விக்னேஷ் சிவன், விவேக், முத்தமிழ் ஆகியோரின் பாடல்கள் இயற்ற, திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சி அளிக்க, தஸ்தா நடனம் அமைக்கிறார்.
‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ ரசிகர்களை கட்டிப்போட்டு கவர்ந்து இழுக்கும் படமாகும். மிக சிறந்த நடிக நடிகையர், திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் என்கிற கலவையுடன் வெளி வர இருக்கும் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளிவர உள்ளது. clap போர்டு productions சத்தியமூர்த்தி இந்த படத்தின் திரைஅரங்கு விநியோக உரிமையை பெற்று உள்ளார். இந்த மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்பதை ஆணித்தரமாக நம்புகிறோம் ” என நம்பிக்கையோடு கூறுகிறார் தயாரிப்பாளர் காவ்யா வேணுகோபால்.