அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறன் இணைந்து வழங்கும்’BAD GIRL’

தயாரிப்பு: காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்தப் படத்திற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அமித் திரிவேதி முதல்முறையாக தமிழில் அறிமுகமாகி 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

வெற்றி மாறனுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் “BAD GIRL” படக்கதையை எழுதி இயக்கியுள்ளார். குறிப்பாக இவர் விசாரணை மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் வெற்றி மாறனுடன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது .

மேலும் காலம் போற்றும் குடும்ப உறவுகளைப்பற்றிப் பேசும் இந்த “BAD GIRL” படமானது வரும் 2025 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 9 வரை ராட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 54 வது பதிப்பில் நடைபெறும் Tiger Competition போட்டியின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.