நகைச்சுவை நடிகர் சதீசுக்கு திருமணம்


தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் சதீஷ். விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.

இந்நிலையில் நடிகர் சதீசுக்கு இன்று காலை வானரகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
மணப்பெண்ணின் பெயர் சிந்து. இவர் சிக்சர் பட இயக்குநரின் தங்கை ஆவார். சிக்சர் படத்தில் நடிகர் வைபவ் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்திருந்தார். அதனால் இது காதல் திருமணம் என்று வதந்தி பரவியது. ஏனென்றால் மணப்பெண் சிந்து சிக்சர் பட இயக்குநரின் தங்கை ஆவார்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிக்சர் பட இயக்குநர் சாச்சி, சதீஷ் – சிந்து இருவரின் புகைப்படத்தையும் வெளியிட்டு இது நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று பதிவை வெளியிட்டார்.

முன்னதாக நேற்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.