பிரபலமான தொகுப்பு எழுத்தாளர் ஆக இருந்து திரை உலகின் மிக நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவர் ஆக கருதப்படும் ராஜூ ‘குக்கூ’ மூலம் இயக்குனராக அறிமுகமானார்.விமர்சகர்களால் மட்டுமின்றி வர்த்தக ரீதியாகவும் பெரிய அளவுக்கு பேசப்பட்ட ‘குக்கூ’ படத்தின் இயக்குனர் ராஜூ தனது அடுத்த படத்தின் ஆயுத்த பணிகளில் தீவிரமாக இருக்கிறார்.
“ஊடக நண்பர்களின் ஆதரவு என்னுடைய முதல் படம் பெரும் வெற்றி அடைய முக்கிய காரணம்.’குக்கூ’வின் வெற்றி எனக்கு கொடுத்த மகிழ்ச்சியை விட அடுத்த படத்தை பெரிதாக தர வேண்டும் என்ற உந்துதல் தந்ததே அதிகம்.தற்போது எனது அடுத்த படத்துக்கான கதையை எழுதிக் கொண்டு இருக்கிறேன். அந்த படத்தின் கதா பாத்திரங்களை அந்த கதைதான் தீர்மானிக்கும்.ஊடகங்கள் இடையே எனது அடுத்த படத்தைப் பற்றி கற்பனைக்கு யூகங்களும் கேள்விகளும் பெரிதளவில் இருப்பதை நான் அறிகிறேன். அந்த தகவல்கள் எதுவும் இந்த தருணத்தில் உண்மையில்லை.எழுத்திலும் செயலிலும் காட்டும் வீரியத்தை சொல்லில் காட்ட விழைவதில்லை.நான் அடுத்ததாக முற்றிலும் தொட படாத ஒரு புதிய கதை களத்தில் பயணமாக உள்ளேன்.இதை பற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வரும்” என்று உறுதியாக கூறுகிறார் ராஜூ முருகன்.