கடந்த வருடம் வெளி ஆன படங்களில் குறைந்த முதலீட்டில் , பெரும் செலவில் தயாரிக்கப் பட்ட படங்களுடன் மோதி பெரும் வெற்றிப் பெற்றப் படம் ‘டார்லிங்’. கே.ஈ ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் வெளி வந்த இப்படத்தின் தலைப்பு இன்னொரு படத்தின் வெற்றிக்கு வழி வகுக்க இருக்கிறது.
கலை அரசன், புது முகம் ரமீஸ் ராஜா, புது முகம் மாயா, காளி வெங்கட், அர்ஜுன், ‘முண்டாசுப் பட்டி’ முனீஸ் காந்த்,’மெட்ராஸ்’ ஜானி ஆகியோர் நடிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘டார்லிங் 2’ எனப் பெயர் சூட்ட பட்டு உள்ளது.
டார்லிங் முதல் பாகத்தை தயாரித்த ஞானவேல் ராஜா இந்தப் படத்தை வெளி இடுவதுக் குறிப்பிட தக்கது.சதீஷ் சந்திரசேகரின் இயக்கத்தில், உருவாகும் இந்தப் படத்துக்கு முன்பு ‘ஜின்’ எனப் பெயரிடப்பட்டு இருந்தது.
“இரண்டாம் பாகம் என்பது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.அதே நடிகரோ , அதே இயக்குனராக இருக்கவும் வேண்டாம். முந்தைய பாகத்தின் கதை கருவை ஒட்டிய கதைதான் இரண்டாவது பாகத்துக்கு மிக முக்கியம். ஐந்து நபர்கள் சுற்றுலா செல்லும் போது, அவர்களுடன் அழையா விருந்தாளியாக வரும் ஒரு ஆவி அவர்களிடையே ஏற்படத்தும் குழப்பத்தை, நகைச் சுவையுடன்,காதலும் கலந்து கொடுத்து இருக்கிறார் புதிய இயக்குனர் சதீஷ் சந்திர சேகர்.
இந்தக் கதைக்கு டார்லிங் 2 தலைப்பு நன்றாக இருக்கும் என்பதை படம் பார்த்த ஒரு நொடியில் தீர்மானித்தேன்.அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வெளி வர உள்ள ‘ டார்லிங் 2’ அனைத்து தரப்பு மக்களையும் சென்று அடையும் என்பதில் சந்தேகமே இல்லை” என்றார் ஞான வேல் ராஜா.