தர்மதுரை வெற்றிபெற்றதை அடுத்து அப்படத்தின் 100 ஆம் நாள் கேடயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மனமகிழ்ந்து தர்மதுரை படக்குழுவினரை வாழ்த்தி பெற்றுக்கொண்டார்.
இந்த சந்திப்பு ஏறக்குறைய 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது. தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் R.K சுரேஷ், இயக்குனர் சீனு ராமசாமி, படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி ஆகியோரை பாராட்டி படத்தின் அம்சங்களை குறிப்பிட்டு அவற்றை பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
விஜய் சேதுபதி, எம்.எஸ். பாஸ்கர், ராஜேஷ், தமன்னா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் இயல்பான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிட்டார்.
சீனு ராமசாமியின் படங்களில் அவர் கவனித்து வரும் சமுக அக்கறையுள்ள தன்மைகளை விவரித்து பாராட்டினார்.
வில்லனாக நடிக்கும் போது தனது முழுமையான நடிப்புத்திறனை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது அந்த வகையில் தாரைத்தப்பட்டை, மருது போன்ற படங்களில் சிறப்பாக நடித்து முன்னேறி வருவதாக நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷை பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
முள்ளும் மலரும் – காளி தந்த பாதிப்பில் சினிமாவில் நுழைந்த எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்ததும், அவரின் பாராட்டும் தெம்பும் இந்த நாள் தந்த மிக சிறந்த பரிசாக நான் பார்க்கிறேன் என்றார் இயக்குனர் சீனு ராமசாமி.
உண்மையான தர்மதுரைக்கு தங்கள் தர்மதுரையின் 100ம் நாள் கேடயத்தை வழங்கியதில் மகிழ்ச்சி அடைந்தனர் படக்குழுவினர்.