தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா ரஞ்சித்திற்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
பா.ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன்பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றி கண்டார். படம் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் பாராட்டுகளை பெற்றன.
இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித்-அனிதா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
இத்தம்பதிக்கு ஏற்கனவே மகிழினி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு மிளிரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.