நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்க போவதாக வந்த செய்தியை, அவர் திட்டவட்டமாக மறுக்கிறார்.
“இன்று காலை ஒரு தின பத்திரிகையில் நான் நடிக்க போவதாக வந்த செய்தியை கண்டு அதிர்ச்சியுற்றேன். திரை துறை மீது எனக்கு அபரிதமான மரியாதை உண்டு. நான் nutrition Dietics துறையில் கவனம் செலுத்தி, காலை முதல் மாலை வரை பிஸியாக இருக்கிறேன். நான் நடிக்க போவதாக கூறப்படும் படத்தின் இயக்குனர் வடிவேல் எங்கள் குடும்பத்து நண்பர். தவிர அவர் அப்பாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். நான் அந்த படத்தை தயாரிக்கவும் இல்லை, அதில் நடிக்கவும் இல்லை” என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.