சில முன்னணி விளம்பர படங்களை தயாரித்த R.J.media creations முதல்முறையாக தமிழில் “இங்கிலீஷ் படம்” எனும் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்.
படத்தை பற்றி இயக்குனர் குமரேஷ் குமார் கூறும் போது, இப்படம் காமெடி த்ரில்லராக வளர்ந்து வருகிறது. ஆனால் இப்படம் அவரை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு போக கூடிய படமாக அமையும் என்றார்.இப்போதைக்கு இதை மட்டுமே கூறிய இயக்குனர் மற்ற விஷயங்ளை விரைவில் அறிவிப்போம் என்றார்.
படத்தில் நடித்துள்ள நடிகர் ராம்கி கூறும்போது, இப்படத்தில் நான் நாயகனும் கிடையாது,வில்லனும் கிடையாது. ஆனால் இப்படம் என்னை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு போக கூடிய படமாக அமையும் என்றார்.
படத்தை பற்றி நடிகர் சஞ்சீவ் கூறும் போது, நான் குளிர் 100 படத்தில் கதாநாயகனாக அறிமுகமானேன். அதையும் சேர்த்தும் 7 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். குளிர் 100 படத்தை தவிர வேறு எந்த படமும் எனக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை. ஆனால் “இங்கிலீஷ் படம்” மூலம் நல்ல அடையாளம் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை. இந்த படத்தில் நான் நடிக்கும் ஒவ்வொரு காட்சியும் ஒரு அறிமுக நடிகராக உணர்ந்து தான் நடித்து வருகிறேன். இப்படம் வெளியீட்டிற்கு பிறகு எங்கள் படக்குழுவினர் பலருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
இப்படத்தில் ராம்கி,சஞ்சீவ்,மீனாட்சி,மதுமிதா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களை கொண்டு இயங்கி வருகிறது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக சென்னையில் நடந்து வருகிறது.
PRODUCER : R.J.M.வாசுகி, MUSIC DIRECTOR : M.C.ரிகோ, CAMERA MAN :சாய் சதீஷ், EDITOR : M.மகேந்திரன், DANCE MASTER : R.சங்கர், ART DIRECTOR : A.பழனிவேல்