சூப்பர்ஸ்டார் படத்தை விசிலடித்து பார்த்து ரசித்த பிரபல நடிகை!


விஜய்யின் பிகில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை இந்துஜா. இவர் ஏற்கனவே மேயாதமான் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

தற்போது நடிகை இந்துஜா சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சூப்பர்ஸ்டாரின் மெஹா ஹிட் படமான பாட்ஷா டிஜிட்டல் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இத்திரைப்படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளார் இந்துஜா. முகத்தை மூடிக்கொண்டு ரசிகர்களுடன் ரசிகராக விசிலடித்து பார்த்து ரசித்ததாக தெரிவித்துள்ளார்.