போர்க்கதைதான் இந்த காஸி. ப்ளூ ஃபிஸ் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படமானது இதுவரை இந்திய சினிமாவில் எடுக்கப்பட்ட தேசப்பற்று படங்களில் தனித்துவம் பெற்ற படமாகும். முழுக்க முழுக்க கடலுக்கடியில் நடக்கும் யுத்தத்தினை நவீன தொழில்நுடபத்துடன் தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சங்கல்ப். இன்று நடைபெற்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் நாயகன் ராணா டகுபதி, இயக்குனர் சங்கல்ப், படத்தின் இசை அமைப்பாளர் கே, பி.வி.பி யின் நிர்வாக இயக்குனருமான கே.கேயும் கலந்து கொண்டார்.
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் நாயகன் ராணா டகுபாதி பேசிய போது, என்னுடைய சிறுவயது காலங்களில் கேள்விபட்ட காஸி போர் தான் இப்படத்தின் கதை. ப்ளூ ஃபிஸ் என்ற புத்தகத்தை எழுதிய இயக்குனர் சங்கல்ப் முதலில் இதை ஒரு குறும்படமாக இயக்க திட்டமிட்டிருந்தார், ஆனால் இப்படம் முழுநீள திரைபடமாக தற்போது வெளிவந்துள்ளது.இப்படமானது விசாகபட்டிணத்தில் 71 நாட்கள் நடந்த யாரும் அறிந்திராத கடலுக்கடியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.போர்களத்தில் நமக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இப்படம் பெருமை சேர்க்கும் என்றும்,ஒரு நீர்மூழ்கி
கப்பலில் கடலுக்கடியில் வாழும் கடற்படை வீரர்களின் வாழ்க்கையையும்,அவர்களின் ஒழுக்கத்தையும் இப்படத்தில் நீங்கள் பார்க்கலாம் என்று கூறினார்.
இப்படத்தின் இயக்குனர் சங்கல்ப் பேசுகையில் என்னுடைய முதல் படமே ஒரு சொல்லபடாத உண்மை சம்பவத்தை சொல்வதில் பெருமை கொள்கிறேன் என்றும்,இப்படத்தை நான் இயக்கியதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் என கூறினார்.
இசையமைப்பாளார் கே பேசுகையில், இந்திய திரையுலக வரலாற்றில் இப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு முக்கிய திரைப்படம். முற்றிலும் புதிய களத்தை கொண்டது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தனித்தன்மை கொண்ட இப்படம், என் சினிமா வாழ்க்கையில் என்னை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும் என கூறினார்.
இந்திய சினிமா வரலாற்றில் பல தேசபற்று படங்கள் வந்திருந்தாலும், சொல்லபடாத வரலாற்றை சொல்லிய இந்த காஸி இனி வரும் காலங்களில் சொல்லும் படியான வரலாற்றை படைக்கும்.