தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், சிவா, ராஜன், எஸ்.வி.சேகர், டி.ஜி.தியாகராஜன், சுரேஷ் காமாட்சி, சிவசக்தி பாண்டியன், தனஞ்செயன் ஆகியோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அப்போது தமிழ் சினிமாதுறைக்கு ஜி.எஸ்.டி.வரியில் சலுகைகள் வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.
கோரிக்கையை பெற்ற நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் “ஜி.எஸ்.டி.கவுன்சிலுக்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார்”.