ஹன்சிகா நடிப்பில் அறிமுக இயக்குனர் U R ஜமீல் இயக்கத்தில், ஜிப்ரான் இசை அமைப்பில், Etcetra Entertainment என்கிற நிறுவனத்தின் சார்பில் மதியழகன் தயாரிக்கும் புதிய படம் ‘மஹா’.இந்த படம் ஒரு crime திரில்லர் படமாகும்.
“ஹன்சிகா அபரிதமான அழகும் தனிப்பட்ட முறையில் அவர் செய்து வரும் தொண்டுகளும், ரசிகர்கள் மனதில் அவருக்கு நிலையான இடத்தை தந்து இருக்கிறது. அவருடைய இமேஜை மனதில் வைத்து, அவருடன் இரண்டு படங்கள் இணை இயக்குனராக பணியாற்றி உள்ள இயக்குனர் U R ஜமீல் கதையை அவரை வைத்து எழுதி இருக்கிறார். இந்த கதை hollywood படங்களுக்கு சவால் விடும் திறன் படைத்தது. அவருடைய கதைக்கு பொருத்தமானவர் ஹன்சிகா தான் என்று ஆணித்தரமாக நம்பி இருக்கிறார்.என் நிறுவனத்தின் சார்பில் தரமான படங்கள் மட்டுமே தருவது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்கு உகந்ததாக “மஹா” இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. தமிழ் திரை ரசுகர்களுக்கு இந்த திரைப் படம் மறக்க முடியாத படமாக இருக்கும் என நம்புகிறேன்” என்கிறார் தயாரிப்பாளர் மதிஅழகன்.