ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் நடிக்கும் திரைப்படம் ‘இனிமே இப்படித்தான்’ ஜூன் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. முழுநீள நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘இனிமே இப்படித்தான்’ டிரைலர் 1 மில்லியன் பார்வைகளை தாண்டி டிரென்ட் ஆகியுள்ளது. இப்படம் ‘U’ என தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
“புதுமுக இயக்குனர் இரட்டையர்கள் முருகானந்த் கூறுகையில் “ ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் மகிழ்விக்கக் கூடியவர் சந்தானம் என்பதற்கு இது சான்றாய் அமைந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பு மகிழ்ச்சியை தருகிறது. கோடையில் ஒரு சிரிப்பு மழை கொண்டாட்டமாக ‘இனிமே இப்படித்தான்’ ஜூன் 12 ஆம் தேதி வெளிவருகிறது” எனக் கூறினர்.