இயக்குனர் VZ துரை வெளியிட்ட ‘காதலின் தீபம் ஒன்று’ டீஸர்!

கடந்த 2016 ஆம் ஆண்டு ‘ராடம் பிலிம் பெஸ்டிவெல்’ குறும்பட போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற சிறந்த குறும்படம் ‘அசரீரி’. அந்த படத்தை இயக்கிய ஜி.கே என்பவரின் அடுத்த குறும்படமே ‘காதலின் தீபம் ஒன்று ‘.

இயக்குனர் ஜி.கே அதர்வா,ஸ்ரீ திவ்யா, நரேன் நடிக்கும் பரணேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகும் ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

பொதுவாகவே காதலில் தோற்ற இளைஞன் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தை பிடித்து பல சாதனைகளை புரிவது போலவும் இதனை நினைத்து முன்னாள் காதலி வருத்தப்படுவது போலவும் கதைக்களம் அமைப்பது வழக்கம். ஆனால் யதார்த்தம் அப்படி மட்டும் இருப்பதில்லை என சொல்லும் படமே இந்த ‘காதலின் தீபம் ஒன்று ‘.

இதில் இந்தியாவை சேர்ந்த ஜப்பான் தொழிலதிபர் சுரேஷ் நல்லுசாமி என்பவர் கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ளார்.கதாநாயகன் சுரேஷ் அவர்களுக்கு இது முதல் படம் என்றாலும் மிக சிறப்பாக நடித்துள்ளார் என பாராட்டுகிறார் இயக்குனர் ஜி.கே.

நடிகர்கள் : சுரேஷ் நல்லுசாமி, ஜனனி ரத்தினம் & தீபா நடராஜன்

இசை : ஆண்டன் ஜெப்ரின்

ஒளிப்பதிவு: பிரவீன் குமார்

பாடல்கள்: நாச்சியம்மை விஜய்

படத்தொகுப்பு: ராகுல்

இயக்கம் : ஜி.கே

இந்த படத்தின் டீசரை இயக்குனர் VZ துரை அவர்கள் வெளியிட்டு படக்குழுவினரை மனதார பாராட்டினார்.

KADHALIN DHEEPAM ONDRU | OFFICIAL TEASER