விஜய்யுடன் மீண்டும் இணையும் காஜல் அகர்வால்?


விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.

இத்திரைப்படத்திற்கு அடுத்ததாக விஜய் அர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் தான் நடிகை காஜல் அகர்வால் மீண்டும் விஜயுடன் இணைய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இந்தக் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த துப்பாக்கி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காஜல் அகர்வால் ரசிகர்களுடன் பேசிய வீடியோவில்,

”எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் தான், நாங்கள் கூடிய விரைவில் மீண்டும் ஒரு படத்தில் இணைவோம்,” என்று தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இணைவதாக பேசிக்கொண்டிருக்கும் படத்தில் இவர் தான் ஹீரோயின் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.