ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு 7 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முழு அரசு மரியாதையுடன் அண்ணா நினைவிடம் அருகே கலைஞரின் நல்லடக்கம் நடந்த நேரத்திலிலிருந்து, பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.
பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கலைஞர் கருணாநிதி திரைப்படங்களை விரும்பிப் பார்க்கக்கூடியவர். 2006 முதல் 2011 வரை அவர் முதலமைச்சராக இருந்த நாட்களில் அவர் அதிகப் படங்கள் பார்த்தது நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில்தான்.
அங்கு நிர்வாகப் பொறுப்பில் இருந்த கல்யாணம், அக்காலகட்டத்தில் கலைஞரின் செல்லப்பிள்ளையாக இருந்தார் எனலாம்.
கலைஞருக்கு என்ன தேவை? என்பதை அவர் முகக்குறிப்பில் அறிந்து தேவையானவற்றைச் செய்வார் என்பதால் கலைஞருக்கு அவரை மிகவும் பிடிக்கும்.
இப்போது நாக் ஸ்டுடியோஸ் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் கல்யாணம், இன்று கலைஞர் நினைவிடம் வந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.