ஏழு வயது முதல் எழுபது வயதுவரை வித்யாசமான வேடங்களில் ராகவா லாரன்ஸ்
லாகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள படம் காஞ்சனா – 2. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தமாதம் 17-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக உள்ளது.
சினிமா ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள இந்தப் படத்தில் லாரன்ஸ் 70 வயது கிழவியாக நடித்துள்ள புகைப்படங்கள் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தவிர இந்த படத்திலேயே 7 வயது சிறுவனாகவும் லாரன்ஸ் நடித்திருக்கிறார்.
அந்த வித்தியாசமான தோற்றத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…இப்படி ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நீ நடித்திருக்கிறாய் உனக்கு அந்த ராகவேந்திரர் ஆசி எப்போதும் உண்டு. இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று பாராட்டினார்.
படம் தமிழ், தெலுங்கு, இரு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.