ராஜா கதை : ஒரு ஊர்ல ஒரு ராஜா, அந்த ராஜா மகா வீரர் எல்லா போர்லயும் அவரு தான் ஜெயிப்பாருனு சின்ன வயசுல கதை கேட்டிருப்போம்…
கார்கில் – ஒரு கார்ல ஒரே ஒரு ராஜா
சென்னை டூ பெங்களூர் கார்ல போற நம்ம ராஜாவுக்கு காதலியுடன் சின்ன விரிசல், அந்த சின்ன விரிசல் கார்கில் போராக மாற, ராஜா போராடி முடிவில் வெல்லும் காதல் கதை.
இப்படத்தைப் பற்றி இயக்குனர் சிவானி செந்தில் கூறியதாவது:
தமிழ் திரை வரலாற்றில் முதல் முறையாக ஒற்றை நடிகன் மட்டும் திரையில் தோன்றூம் புது முயற்சி.
புதிய படைப்புகளுக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மிக குறைந்த பட்ஜெட்டில் தரமான படைப்புடன் களம் இறங்கியுள்ளேன். கதைநாயனகாக ஜிஷ்னு எனும் அறிமுக நாயகன் தோன்றுகிறான், அவன் அர்ப்பணிப்பு நிச்சயம் நிலையான இடத்தை அவனுக்கு பெற்று தரும். மற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்களும் தமிழ் திரையுலகில் மிக உயரத்திற்கு செல்ல காத்திருக்கும் அறிமுக நபர்களை எனபதில் பெருமை கொள்கிறேன்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியவர் : சிவானி செந்தில், ஒளிப்பதிவு : கணேஷ் பரமஹம்ஸா, இசை :விக்னேஷ் பாய் , பாடல்கள்: பாரி இளவழகன் மற்றும் தர்மா, எடிட்டிங் : அபிநாத், , மக்கள் தொடர்பு : செல்வரகு , தயாரிப்பு : சுபா செந்தில் .
இப்படத்தின் இரண்டு பாடல்களும் மற்றும் மொத்த படப்பிடிப்பும் சென்னை தொடங்கி பெங்களுர் எலெக்டரானிக்ஸ் சிட்டி முடிய மிக குறைவான் நாட்களில் படப்பிடிக்கபட்டது.
தமிழ் சினிமாவில் மிக வெற்றிகரமான தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ். தாணு பாடல்களை வெளியிட்டார்
அனைத்து போஸ்ட் புரடக்ஷன் வேலைகளும் நிறைவு பெற்று திரைக்கு வரத்தயார் நிலையில் தயார் நிலையில் உள்ளது.மிக விரைவில் சென்சார் பெற்று என் படைப்பை மக்களுடன் பகிர மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.