Indian Army யில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் இருந்த திரு.M.A.பாலா இயக்குகிற படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும். Diploma in Film Making படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார்.
ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்குமென எப்படி நியூட்டனின் விதி சொல்கிறதோ, அதே மாதிரி, உலகின் ஏதோ ஒரு மூலையில் பட்டாம்பூச்சி சந்தோசமாய் சிறகடித்து சுற்றித் திரிவதற்கும், இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள் வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரே காரணம் இருக்கலாம் என்கிறது கியாவோஸ் விதி. தமிழ் சினிமாக்களில், ‘தசாவதாரம்’ படத்திற்குப் பிறகு இவ்விதியைப் பயன்படுத்தி, சுவாரஸ்யமாய் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் M.A.பாலா.
பார்க்காத காதல், சொல்லாத காதல் என தமிழ் சினிமாவின் அகராதியில் காதல் இல்லாத பக்கமே இல்லை. இந்தப் படத்தில், தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில், ஒரு நாளில் நேர்கிற விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையை இன்னும் பலப்படுத்துகிறது. இறுதியில் கார்த்திகேயன் தனது காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பது அத்தனை சுவாரஸ்யமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
நடிகர்கள், நடிகையர்
கதையின் நாயகர்கள் : தீபக், S.பிளாக்பாண்டி, S.S.ஜெய்சிந்த்
கதாநாயகிகள் : ஹரிதா, மலர்
மற்ற நடிகர்கள் : கொட்டாச்சி, OK OK மதுமிதா, மிப்பு, ஹேமா, மகேஷ்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இசை : F.ராஜ் பரத்,
ஒளிப்பதிவு : டேவிட் ஜான் D.F.TECH.,
படத்தொகுப்பு : ஆனந்த் ஜெரால்டின்,
பாடல்கள் : வடிவரசு
இணை தயாரிப்பு : K. திலகர்,
தயாரிப்பு : மாரியப்பன் ராஜகோபால்
எழுத்து, இயக்கம் : M.A. பாலா.