வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் மதன் கார்க்கி…


கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட பணிகள் முடங்கியுள்ளன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதத்தில் மக்கள் அனைவரும் அரசுக்கு முழு ஆதரவு தந்து வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பலரும் வீடுகளுக்குள்ளேயே இருந்து தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ராஜமௌலி படத்திற்காக கவிஞர் மதன் கார்க்கியும் வீட்டிலிருந்தே பணிபுரிவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜமவுலி இயக்கும் புதிய திரைப்படம் ஆர் ஆர் ஆர். படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது படக்குழுவினர் பின்னணி வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு தான் கவிஞர் மதன் கார்க்கி தான் வீட்டிலிருந்தே பணிபுரிவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.