மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் மார்ச் 22ஆம் தேதி வெளியீடு!


விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய்யின் 64ஆவது திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. முக்கியமாக ஒரு குட்டி ஸ்டோரி என்ற பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் 22ஆம் தேதி மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.