கொரோனா வைரஸ் பீதி – தியேட்டர்கள் மூடல் எதிரொலி – புதிய படங்கள் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது!…


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு தமிழகம் எங்கும் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூட அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 900 தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளதாக தியேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளனர். இதனால் புதிய படங்கள் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போகிறது.

வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருந்த 3 புதிய திரைப்படங்களும் தியேட்டர்கள் மோதல் எதிரொலியாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று, கார்த்தியின் சுல்தான், அனுஷ்காவின் சைலன்ஸ், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல படங்களின் ரிலீஸ் தள்ளிபோகும் என்று தெரிகிறது.