சமீபத்தில் ஓவியா படத்தின் டீஸர், திரைக்கதை ஆசான் இயக்குனர் கே.பாக்யாராஜ் அவர்களால் சென்னையில் வெளியிடப்பட்டது. நிகழ்வில் அப்படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திரு.காண்டீபன் ரங்கநாதன், மூத்த பத்திரிகையாளர் திரு.ஸ்ரீ நாத், எடிட்டர் திரு.சூரிய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கடலூரில் சிறப்பாக செயல்பட்டு வரும் டி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் என்ற குழுமம் சார்பாக இவ்விழா மிக நேர்த்தியாக நடைபெற்றது.
‘இமாலயன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படம் ‘ஓவியா’.புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார்.