த்ரிஷா தற்போது தமிழ் சினிமாவின் பிஸியான நடிகையாவார். கடந்த 15 வருடமாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனியிடம் ஒன்றை அவர் பிடித்துள்ளார். தற்போது த்ரிஷா “ பரமபதம் விளையாட்டு “ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் படபிடிப்பு 200 வருடம் பழமைவாய்ந்த ஆற்காடு கோட்டையில் வைத்து நடைபெற்றது. இந்த கோட்டையை பலநூறு வருடங்களுக்கு முன்னர் மன்னர் அவ்ரங்கஜிப் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடதக்கது. முதல்கட்ட படபிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட படபிடிப்பு இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
24HRS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நந்தா மற்றும் ரிசார்ட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.படத்துக்கு இசை அம்ரிஷ். ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர்.படத்தொகுப்பு பிரேம்.