ஏ ஏழுமலை இயக்கத்தில் எக்ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புழுதி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இன்று வெளியிட்டு வாழ்த்தினார்.
எக்ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் இ சந்தீப் தயாரித்துள்ள படம் புழுதி. இந்தப் படத்தில் நந்தா, சானியாதாரா, ரஞ்சித், சரண்ராஜ், பவர் ஸ்டார் சீனிவாசன், நீலியா, ஜானி, பாண்டி ரவி, யுவராணி, சுஜா, அனுஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தென்னிந்திய மொழிகளில் உள்ள ராஜ்வர்தன், புழுதியின் வில்லனாக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் இயக்குநர் ஏழுமலைக்கு இயக்குநராக இது முதல் தமிழ்ப் படம். இதற்கு முன் ஹாலிவுட் இயக்குநர் ஆங் லீ இயக்கிய லைஃப் ஆஃப் பை படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
புழுதி படத்துக்கு ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். திருடா திருடி, ஆழ்வார், கிங் உள்பசட 25 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ரமேஷ் ஜி.
உமர் எழிலன் இசையமைத்துள்ளார். பல பிரபல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவர் உமர். புதுச்சேரி அரசின் இளைஞர் மாமணி விருதினைப் பெற்றவர்.
பேரரசு, சினேகன், ப்ரியன், இளையகம்பன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
முன்னணி எடிட்டர்களுள் ஒருவரான டான் மேக்ஸ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
கலை இயக்கம் – வினோத்
நடனம் – ரவிதேவ் – பாப்பி
வடிவமைப்பு – சரவணன்
இன்று ஆயுத பூஜையையொட்டி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் வெளியிட்டார். அவர் கூறுகையில், “இயக்குநர்ஏழுமலை கடின உழைப்பாளி. இந்தப் போஸ்டர்களைப் பார்க்கும்போதே படத்தின் தரம் தெரிகிறது. மிகப் பெரிய வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன்”, என்றார்.
Producer Council President Kalaipuli S Thanu has unveiled the first look of A Elumalai’s debut directorial ‘Puzhuthi’ today at his office.
Produced by E Sandeep under his banner Xdreams Shows, the movie has the starcast of Nandha, Saniya Thara, Ranjith, Saranraj, Neeliya, Powerstar Srinivasan and popular South Indian actor Rajvardhan.
Elumalai has previously worked as an Assistant Director of Hollywood Director Ang Li in his Academy award winning movie Life Of Pi.