ரோஹித் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என இருமொழியில் உருவாகிவரும் படம் தான் ‘ரிவெஞ்ச்’.. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துக்கும் இந்தப்படத்தின் கதை, திரைக்கதையை ரெஞ்சு பரிபள்ளி என்பவர் எழுதுகிறார்.
படத்தை மலையாள நடிகரும் இயக்குனருமான தினேஷ் பணிக்கர் தயாரித்து இயக்குகிறார். இவர் மலையாளத்தில் கிரேயான்ஸ், லெப்ட் ரைட் லெப்ட், சாப்பா குரிஷ் ஆகிய ஹிட் படங்கள் உட்பட கிட்டத்தட்ட 12 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர்.. இந்தப்படத்தின் கதை ஊடகம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை சித்திரிக்கும் விதமாக தயாராகிறது
மீடியாவில் பணிபுரியும் காதலர்கள் இருவரின் மேல் பயணிக்கும் விதமாக கதை பயணிக்கிறது. காதலர்களாக கார்த்திக், அனுபமா இருவரும் நடிக்கின்றனர்.. அனுபமாவின் திறமை மீது நம்பிக்கை வைத்து, தீவிராதம் பற்றிய ஆவணப்படம் ஒன்றை எடுக்கும் பொறுப்பை அவரிடம் சேனல் நிர்வாகம் ஒப்படைக்கிறது.. அனுபமாவும் அந்த வேலையை செய்து முடிக்க, சாகச பயணத்திற்கு தயாராகிறார்.
ஆனால் அந்த ஆவணப்படம் படம் அவர்களுடைய வாழ்க்கையையே எப்படி புரட்டிப்போடுகிறது என்பதை இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தினேஷ் பணிக்கர். த்ரில், சாகசம் இரண்டும் நிறைந்த படமாக இது இருக்கும் என உறுதியாக நம்பலாம்.