சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி மிகப் பெரும் வெற்றி பெற்றது.
இதில் அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, ரவி கிஷன், ஜெகபதி பாபு, தமன்னா, என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இந்நிலையில் சிரஞ்சீவி, திரிஷா நடிக்கும் புதிய திரைப்படம் வருகிற டிசம்பர்மாதம் முதல் வாரத்தில் துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரட்டாலா சிவா படத்தை இயக்குகிறார். இதற்கான பூஜை நடைபெற்ற நிலையில் படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கியுள்ளது.