சூர்யா தற்போது சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் ஏர்டெக்கான் நிறுவன தலைவர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இத் திரைப்படத்தை தயாரித்துள்ளது.
படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடந்து வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பட தயாரிப்பாளர்களில் ஒருவரான குனீத் மொங்கா,படத்தை தேசிய அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தமிழ் மொழியில் நடித்த அதை நட்சத்திரங்களைக் கொண்டு இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்களாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரரைப் போற்று திரைப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.