“புழல்” படத்தில் நடித்த திரைப்பட நடிகர் மனோ விபத்தில் மரணம்


சன் டிவியில் தொகுப்பாளராகவும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்சராகவும் பிரபலமானவர் மனோ. இவர் “புழல் ” திரைப்படத்தில் மூன்று நாயகன்களில் ஒருவராக அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்தார். மேடை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார் மனோ.

இவர் நேற்று (28.10.19) தீபாவளி அன்று மனைவி லிவியாவுடன் அம்பத்துாரில் காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மனோ அதே இடத்தில் மரணமடைந்தார். அவருடைய மனைவி உயிருக்கு போராடினார்.

அவரை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

மனோவின் மரணம் தமிழ்த்திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.