ரியாஸ்கானின் பிறந்த நாள் கொண்டாடிய ‘தனிமுகம்’ படக் குழு!

பாலா இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’ படத்தில் வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். தயாரிப்பாளரான இவர் தன் ஸ்டுடியோ 9 தயாரிப்பு நிறுவனம் சார்பில் அண்மையில் வெளியாகி வெற்றிப் படமாகியுள்ள ‘தர்மதுரை ‘ வரை பல படங்கள் தயாரித்துள்ளார்.

இவர் இப்போது ‘தனிமுகம்’ என்கிற படத்தில் நாயகனாக நடிக்கிறார். சஜித் இயக்குகிறார். இப்படத்தில் ரியாஸ் கான் நடிக்கிறார். இன்று லீக் கிளப்பில் ‘தனி முகம்’ படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படப்பிடிப்பில் ரியாஸ்கானின் பிறந்த நாள் கொண்டாடப் பட்டது.

படத்தின் நாயகன் ஆர்.கே சுரேஷ், நடிகை அஞ்சனா கீர்த்தி, இயக்குநர் சஜித் , ஒளிப்பதிவாளர் கேசவன் உள்பட படக் குழுவினர் அனைவரும் ரியாஸ்கானை வாழ்த்தினர்.