கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி ரூபாய் வழங்கினார் நடிகர் சூர்யா . விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா இரண்டு லட்சம் வழங்கப்பட்டது.
கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் தயாரிப்பாளர் சூர்யா , நடிகர் கார்த்தி , 2D ராஜ் சேகர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து , இளவரசு , ஸ்ரீமண் , மனோஜ் குமார் , நாயகி சயீஷா , பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு , பானு ப்ரியா , மௌனிகா , ஜீவிதா , இந்துமதி , கலை இயக்குனர் வீர சமர் , எடிட்டர் ரூபன் , இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் சூர்யா பேசியது :- “ எல்லா புகழும் இறைவனுக்கே “ இயக்குநர் பாண்டிராஜை தவிர இப்படத்தை யாராலும் சிறப்பாக எடுத்து வெற்றி படமாக இதை கொடுத்திருக்க முடியாது. பிளாக் பஸ்டர் மேடையை நான் பார்த்ததே வெகுநாளாகிவிட்டது. இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படம் சினிமாவின் மூலம் கண்டிப்பாக நல்ல செய்திகள் பலவற்றை சொல்ல முடியும் என்று நிருபித்துள்ளது. இங்கே நமது தமிழ் நாட்டில் நிறைய டாக்டர்கள் , என்ஜினியர்கள் என்று பலர் உள்ளனர். ஆனால் ஒரு விவசாயியை கொண்டு வருவது கடினமான ஓர் விஷயமாக உள்ளது. இந்த படம் வெற்றி பெற்றதுக்கு முக்கியமான காரணம் ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அன்பு தான். எங்களை விட அதிகமாக வேர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான். அதனால் தான் ரூபாய் ஒரு கோடியை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். எல்லோரும் கமர்ஷியலாக படமெடுக்கட்டும் ஆனால் நாங்கள் 2டி மூலம் மக்களுக்கு கருத்து சொல்லும் value based entertainment படங்களை தான் எடுப்போம் என்றார் சூர்யா.
விழாவில் கார்த்தி பேசியது :- நிறைய பேர் நல்ல படம் ஜெயப்பதில்லை என்று சொல்கிறார்கள் ஆனால் அது பொய். நிஜமாகவே நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக ஓடும். திரையரங்கில் மல்லி பூ வாசம் மற்றும் குழந்தைகள் அழும் சத்தம் கேட்கிறது என்று சொல்லும் போது படத்துக்கு அனைவரும் குடும்பத்தோடு வருகிறார்கள் என்று தெரிகிறது. நாங்கள் ஸ்டாப் என்ற அமைப்பை தற்போது உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் வைட் சுகரை எப்படி நிறுத்துவது , நாம் கம்மியாக உபயோகிக்கும் மஞ்சளை எப்படி நமது தினசரி வாழ்கையில் எடுத்து வருவது என்பதை பற்றி ( தினமும் நாம் உண்ணும் உணவில் மஞ்சள் சேர்த்தால் கேன்சர் வராது ) , எப்படி நாம் தினமும் உண்ணும் காய்கறிகளிலிருந்து என்னை எடுத்து உபயோகிப்பது மற்றும் தானியங்களின் முக்கியத்துவும் பற்றி இந்த அமைப்பு மக்களிடம் கொண்டுசேர்க்கும் என்றார் கார்த்தி.
நடிகர் சத்யராஜ் பேசியது :- இந்த படத்தை முதலில் மக்கள் மீது அக்கரைக்கொண்டு நாட்டை பாதுக்காக்கிறோம் என்றும் , சொகுசாக தாங்கள் செல்ல மரங்களை வெட்டி சாலை அமைக்கும் குழுக்களுக்கு படத்தை முதலில் போட்டு காட்ட வேண்டும். இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் 2D நிறுவனம் விவசாயிகளுக்கு உதவியுள்ளது தான். படத்தில் நாங்கள் அனைவரும் ஒருவருக்குஒருவர் போட்டி போட்டு நடித்தோம். படத்தில் எல்லோருக்கும் நன்றாக நடிக்க ஸ்கோப் இருந்தது. நான் முதலிலிருந்து கூறியது போலவே இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் பேசியது :- படத்தின் துவக்கத்தில் கார்த்தி சார் என்னுடைய கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பாரா என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது. அவருடன் பயன் செய்ய ஆரம்பித்ததும் எல்லாம் சரியாக இருந்தது. யாரோ நான் நடிகர்களோடு கோபமாக இருப்பேன் என்ற புரளியை கிளப்பியுல்லார்கள். அது சுத்த பொய். படத்தில் இடம்பெற்ற ரேக்ளா ரேசை ரசிகர்கள் அனைவரும் ரசித்து கொண்டாடுகிறார்கள். அதை படத்தில் கொண்டுவர நானும் ராஜா சாரும் மிகவும் சிரமப்பட்டோம் என்பது தான் உண்மை. பீட்டாவை சேர்ந்தவர்கள் படத்தை பார்த்துவிட்டு 1 நிமிடத்தை நீக்கிவிட்டார்கள். எங்கள் ஆடு , மாடுகளை நாங்கள் அண்ணன் , தம்பியாக பார்த்து வருகிறோம். நானும் ஆடு , மாடு மேய்த்து வந்தவன் தான். எங்களை விட சிறப்பாக அவர்களை யாராலும் பார்க்க முடியாது. உங்களால் ஆட்டை அல்லது மாட்டை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓட்டி கூட்டி செல்ல முடியுமா ? கண்டிப்பாக முடியாது ? அப்படி உங்களுக்கு என்ன அக்கரை எங்களுக்கு இல்லாதது ? நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எங்கள் ஆடுமாடுகளை. நீங்கள் யாரும் கவலை பட வேண்டாம். ஒரு கல்யாணவீட்டுக்கு சென்றால் கூட நாங்கள் மாடு சாப்டாம இருக்குமே , தண்ணி வைக்கனுமே என்று ஓடி வருவோம் அவர்களை கவனிக்க ? மட்டன் , சிக்கன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு இது எப்படி தெரியும் என்றார்.