ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ‘திருப்பதிசாமி குடும்பம்’ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் ஜே.கே, ஜாகீன் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் அறிமுகமாகிறார். மற்றும் தேவதர்ஷினி, லஷ்மி ஐஸ்வர்யா, மயில், முத்துராமன், கே.அமீர், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – Y.M.முரளி / இசை – சாம் டி.ராஜ்
பாடல்கள் – கபிலன், சொற்கோ, ரோகேஷ், மீனாட்சிசுந்தரம்.
எடிட்டிங் – ராஜா முகம்மது / கலை – ஆரோக்கியராஜ்
நடனம் – தினேஷ், அமீப் / ஸ்டன்ட் – பயர் கார்த்திக்
தயாரிப்பு நிர்வாகம் – சிவா, வேல்முருகன் / தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.எம்.சேகர்
இணை தயாரிப்பு – திருப்பூர் K L K.மோகன்
தயாரிப்பு – பாபுராஜா, ஜாபர் அஷ்ரப்
எழுதி இயக்குபவர் – சுரேஷ்சண்முகம். இவர் வெற்றிபெற்ற அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கியவர்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..
ஒரு நடுத்தர குடும்பத் தலைவன் திருப்பதிசாமி, கால் டாக்சி டிரைவரான திருப்பதிசாமி, அவரது மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த குடும்பத்திற்கு ஒரு சின்ன தடங்கல்.
திருப்பதிசாமியின் பிள்ளைகளுக்கு நடக்கும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று அந்த சந்தோஷக் குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே கதை !
ஜாலியான அதே சமயம் கனமான ஒரு உணர்வையும் இந்த திருப்பதிசாமி குடும்பத்து திரைக்கதை உருவாக்கும் ! நல்ல படம் நல்ல உணர்வை ஏற்படுத்தும் படம் நிச்சயம் மக்கள் மனதில் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி தரும் என்று நம்புகிறோம்.
திருப்பதிசாமி குடும்பம் அந்த வகைப் படமாக பாராட்டு பெறும் என்று நம்பிக்கையுடன் கூறினார் இயக்குனர்.