தி.நகர், காசேதான் கடவுளடா, அகம்புறம், மான் வேட்டை ஆகிய படங்களை தயாரித்து இயக்கியவர் திருமலை. “நெல்லை சந்திப்பு” படத்தை தயாரித்தவரும் இவர் தான்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான திருமலை அடுத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படத்தின் பெயர் :- ” டுடே ஸ்பெஷல் ”
இதன் துவக்க விழா டி.கிரியேஷன்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மகேந்திரகுமார் நாகர், காபர் அலி, பி.ஆர். சண்முகம் , நடிக்கும் நாயகன் நகுல், நாயகி ஆர்தனா பினு, நய்னா சாய், ரவிமரியா, கலந்து கொண்டனர். மேலும் இதில் பிரபல நாயகி ஒருவரும், கூல் சுரேஷும் நடிக்க உள்ளதாக கூறுகிறார்கள்.
ஒய்.என். முரளி ஒளிப்பதிவையும், சித்தார்த் விபின் இசையையும், வேலு சுப்ரமணியம் வசனத்தையும், சந்துரு படத்தொகுப்பையும், கந்தாஸ் – பாபி நடன பயிற்சியையும், ஸ்டண்ட் சிவா சண்டை பயிற்சியையும், கவனிக்கின்றனர்.
டி.கிரியேஷன்ஸ் சார்பில் எம். திருமலை மற்றும் ஜெசிகா இருவரும் இணைந்து வழங்குகின்றனர்.
படத்தை இயக்கும் எம். திருமலை படத்தைப் பற்றி கூறியதாவது , ” நான் இதுவரை இயக்கிய படங்களில் முற்றிலும் மாறுபட்டு முழுவதும் வேறுபட்டு இன்றைய சமூக அவலங்களை களைவது பற்றிய கமர்ஷியலான ஜனரஞ்சகமான, அனைத்து தரப்பும் விரும்பும் வகையிலான படமாக இருக்கும். இதன் கதையை விரிவாக விரைவில் மக்களுக்கு தெரியபடுத்துவேன்” என்று கூறினார்.
விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது ” டுடே ஸ்பெஷல்” திரைப்படம்.