இந்தி திரையுலகில் கால்பதிக்கும் வேதிகா !


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ள வேதிகா தற்போது பாலிவுட் படத்தில் அறிமுகம் ஆகிறார்.

மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் “எல் க்யூர்போ” என்ற ஸ்பானிஷ் திரில்லர் படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். “தி பாடி (The Body)” என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் பிணவறையில் இருந்து ஒரு சடலம் திடீரென்று காணாமல் போகிறது. அதை தேடும் பணியில் போலீசார் ஈடுபடும்போது, பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகிறது. எதிர்பாராத திருப்பங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் வேதிகா, இம்ரான் ஹாஸ்மி, ரிஷிகபூர், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 13ந் தேதி படம் ரிலீசாகிறது. வேதிகா ராகவா லாரன்சுடன் இணைந்து நடித்த முனி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.