விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரும் துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய மூன்று படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். விஜய் இப்போது அவருடைய 64-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் நடித்துள்ள `தர்பார்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து விஜய்யின் 65-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்று பேச்சு அடிபடுகிறது. `துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கலாமா? என்று ஏ.ஆர்.முருகதாஸ் யோசித்து வருகிறார். `துப்பாக்கி’ படத்தின் கதை மும்பையில் நடப்பது போல் இருக்கும்.
அதே கதைக்களத்தை புதிய படத்துக்கும் வைத்துக் கொள்ளலாமா? அல்லது வேறு ஒரு கதைக்களத்தை பயன்படுத்தலாமா? என்று உதவி டைரக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார், ஏ.ஆர்.முருகதாஸ். விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் மீண்டும் கூட்டணி சேர்ந்தால், அது அவர்கள் இணையும் நான்காவது படமாக அமையும்.