‘M10 PRODUCTIONS’ சார்பாக M.S.முருகராஜ் தயாரிப்பில் வெளியான படம் ‘யா யா’. இப்படத்தில் “மிர்ச்சி” சிவா, சந்தானம், சாய் தன்ஷிகா, சந்தியா ஆகியோர் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் தந்து உருவான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது.
இந்நிலையில், தனது நிறுவனத்தின் அடுத்த படைப்பை தயாரிக்க இருக்கிறார் தயாரிப்பாளர் M.S.முருகராஜ்.
M.S. முருகராஜ் தயாரிக்கவிருக்கும் அடுத்த படம் முழுக்க முழுக்க எமோஷனலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஜனரஞ்சகமான படமாக உருவாகவிருக்கிறது. மனிதர்களுக்கும் ஒட்டகத்துக்குமான பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியுடன் சொல்லும் படமான இதனை ’சிகை’ படத்தின் இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கவிருக்கிறார். படத்தின் திரைக்கதை அமைப்பு வேலைகள் நடைபெற்றுவருகிறது. படத்தின் பூஜை விரைவில் நடைபெறவிருக்கிறது. படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரங்கள் அறிவிக்கப்படும்.