12.12.1950 -விமர்சனம்


தீவிரமான ரஜினி ரசிகரான கபாலி செல்வா குங்பூ மாஸ்டராக இருக்கிறார். ஏரியா கவுன்சிலர் ஒருவர் சுவரில் ஒட்டபட்டிருந்த ரஜினி போஸ்டரை கிழித்துவிட, அந்த தகராறில் ஏற்பட்ட சண்டையில் கபாலி செல்வா தள்ளிவிடும் போது எதிர்பாராத விதமாக கம்பியில் விழுந்து கவுன்சிலர் இறந்துவிடுகிறார். இதனால் கபாலி செல்வா ஜெயிலுக்கு செல்கிறார்.

இந்த நிலையில் அவரால் வளர்க்கப்பட்ட நான்கு இளைஞர்கள், ரஜினியின் ‘கபாலி’ படம் வெளியாவதை முன்னிட்டு முதல் காட்சியை, தங்களது மாஸ்டரான கபாலி செல்வாவை பார்க்க வைத்துவிட வேண்டும் என்றும், அதோடு சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்திக்க வைத்துவிடவேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதற்காக அவரை பரோலில் வெளியே கொண்டுவரும் முயற்சியில் இறங்குகிறார்கள்.

அவர்களால் பரோலில் கபாலி செல்வாவை வெளியில் கொண்டுவந்தார்களா, கபாலி படம் பார்க்க வைத்தார்களா, ரஜினியை சந்திக்க வைத்தார்களா, என்பது தான் இந்த 12.12.195௦ படத்தின் மீதி கதை.

தொண்ணூறுகளில் ஆத்தா உன் கோவிலே என்கின்ற படத்தில் நாயகராக நடித்தவர் செல்வா. பின்னர் கோல்மால் என்ற படத்தை இயக்கி நடித்த அவர் தற்போது ரஜினிகாந்த் பிறந்தநாளன 12.12.195௦ இந்த தேதியை தலைப்பாக வைத்து இந்த படத்தை இயக்கி நடித்திருக்கிறார். அதோடு தன் பெயரை கபாலி செல்வா என்றும் மாற்றியுள்ளார்.

முழுக்க முழுக்க ஒரு ரஜினி ரசிகனின் கதையாக உருவாக்கி இருக்கும் இந்தப்படத்தில் ரஜினி ரசிகராக நடித்துள்ள கபாலி செல்வா, கபாலி படத்தில் வரும் ரஜினி கெட்டப்பிலேயே நடித்து இருக்கிறார். தான் ரஜினி ரசிகரானது எப்படி என்று சொல்லும்போது உணர்வு பூர்வமாக நடித்துள்ளார். நான்கு இளைஞர்களாக வரும் ஆதவன், ரமேஷ் திலக், அஜய் பிரசாத், பிரஷாந்த் கிருபாகரன் ஆகியோர் ரஜினி ரசிகர்களாகவும் அதே நேரம் தங்களது மாஸ்டரின் ஆசையை நிறைவேற்ற கஷ்டப்படுபவர்களாகவும் நன்றாக நடித்துள்ளனர்.

கமல் ரசிகராக வந்து அவரது ஹிட் படங்களுக்கு நடனமாடி கலக்கும் ஜெயில் போள்ஸ் அதிகாரியாக நடித்துள்ள தம்பி ராமையா, ஜெயில் கைதியான யோகி பாபுவின் காமெடி வயிற்றை பதம்பாக்கிறது. அவர்களுடன் குத்துப்பாட்டில் நடித்துள்ள ரிஷா காமெடியிலும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். முக்கியமாக தம்பி ராமையா செய்து இருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் சென்டிமென்டான வேடங்களில் நடித்து கண்கலங்க வைத்துள்ளார். நடிகர் ஜான்விஜய் அவராகவே நடித்துள்ளது படு யதார்த்தம்.

கதையில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் முதல் பாதியில் கஷ்டப்பட்டு நகரும் திரைக்கதை இரண்டாம் பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்றாலும்,. இன்னும் இந்த கதையில் கவனம் செலுத்தி இருந்தால் அந்த விறுவிறுப்பை தக்க வைத்திருக்கலாம். இருந்தாலும், காமெடிக் காட்சிகள் நிறைவாக இருப்பதால், தியேட்டரில் அவ்வபோது சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

12.12.195௦ movie review