படத்தின் நாயகன் அங்காடி தெரு மகேஷ். அப்பா அம்மா இல்லாமல் அண்ணன் அண்ணி ஆதரவில் வாழ்ந்து வருகிறார். அவருடன் பணியாற்றுபவர் நாயகி ஷாலு. நாயகி ஷாலு எல்லோருக்கும் செல்லப்பிள்ளை. மிகுந்த கோபக்காரர். அவரைக் காதலிக்கிறார் மகேஷ்.
ஆனால் நாயகி ஷாலு அவரைக் கண்டுகொள்ளாமல் சீன் போடுகிறார். இந்நேரத்தில் தனது அண்ணியின் உதவியுடன் ஷாலுவுக்கு தனது மனதைப் புரிய வைக்கிறார். இருவரும் காதலிக்கின்றனர்.
மகேஷ் அண்ணனுடன் பணிபுரியும் சக போலிஸ் அதிகாரியான கோகுல் முன்விரோதம் காரணமாக மகேஷின் அண்ணனை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார். இது புறமிருக்க மகேஷ், ஷாலு இருவருக்கும் நிச்யதார்த்தம் நடைபெறுகிறது.
இந்நிலையில் மகேஷின் அண்ணி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.
அவரைக் கொன்றது யார்? மகேஷின் அண்ணனுக்கும், கோகுலுக்கும் உள்ள முன்விரோதம் என்ன? மகேஷ், ஷாலு திருமணம் நடந்ததா? என்பதை மிகக் குறைந்த பட்ஜெட்டில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
அங்காடி தெரு மகேஷின் நடிப்பில் நல்ல முன்னேற்றம். அழகு பதுமையாக வந்து செல்கிறார் நாயகி ஷாலு.
இசையமைப்பாளர் அம்ரீஷின் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.
குறைந்த பட்ஜட்டில் கதையை நம்பி மிக தைரியமாக எடுத்திருக்கிறார்கள். திரைக்கதை மற்றும் எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.