2013 ஆம் ஆண்டு ஹிந்தி வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜாலி LLB’ படமே தமிழில் மனிதன். வாமனன், என்றென்றும் புன்னகை படங்களை இயக்கிய அஹமது இந்த படத்தை இயக்கியுள்ளார்.
பொள்ளாச்சியில் வக்கீல் வேலை செய்யும் உதயநிதிக்கு சரியாக வாடாத தெரியாமல் தனக்கு வரும் அனைத்து வழக்குகளிலும் தோற்றுக்கொண்டே இருக்கிறார். அதனால் அவருக்கு தான் காதலிக்கும் மாமா மகள் ஹன்சிகாவின் வீட்டிலும் கேலியும் கிண்டலுமே மிஞ்சுகிறது.
இதனால் கோபமுறும் ஹன்சிகா ‘நீ வக்கீல் தொழிலுக்கு சரிப்பட மாட்டே” என சண்டை போட்டுவிட ‘ஜெயித்து விட்டு தான் திரும்பி வரணும் ‘என்ற முடிவோடு சென்னையில் உள்ள தனது வக்கீல் மாமா விவேக் வீட்டிற்கு கிளம்புகிறார்.ஆனால் விவேக்கோ இவரைப்போலவே டம்மி வக்கீலாக இருக்கிறார்.
பிளாட்பாரத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்த மக்களின் மேல் காரை ஏத்தி கொன்று விட்ட பணக்கார பையனை பிரபல வக்கீலான பிரகாஷ்ராஜ் தன் வாத திறைமையால் காப்பாற்றுகிறார். தன்னை நம்பி யாருமே வழக்கை தராததால் இதனை பொதுநல வழக்காக எடுத்து மேல் முறையீடு செய்து அனைவரது கவனத்தையும் ஈர்கிறார் உதயநிதி. பின்னர் இவர் அந்த வழக்கில் எப்படி ஜெயிக்கிறார் என்பதே படம்.
காதல், காமெடி, சண்டை, பாட்டு என மசாலா படங்களிலேயே நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் படிப்படியாக முன்னேறி பொதுநல சிந்தனையோடு நடித்திருப்பது வரவேற்கதக்கதே . வக்கீலாக வசனங்களில் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு ஈடுகொடுத்து நடித்திருப்பது சிறப்பே.
பாடலும் காதலும் தேவை என்பதால் ஹன்சிகாவும் படத்தில் இருக்கிறார். நீதிபதியாக ராதாரவி நடித்திருப்பது படத்திற்கு பலமே.அந்த கேரக்டரை தன்னை தவிர வேறு யாராலும் சிறப்பாக செய்திருக்க முடியாது எனும் அளவிற்கு ராதாரவி சிறப்பாக நடித்திருக்கிறார்.ஐஸ்வர்யா ராஜேஷ் தொலைக்காட்சி நிருபராக தனக்கான வேலையை செய்திருக்கிறார். விவேக் நகைச்சுவை நடிகராக மட்டுமே இல்லாமல் குணசித்திர வேடத்தில் நடித்திருப்பது சிறப்பு. பாடல்கள் அனைத்தும் ஓகே ரகம்.
மொத்தத்தில் குடும்பத்துடன் ரசிக்க மனிதன் சிறந்த படமே.
Verdict: 3.5/5