நகர்வலம் – விமர்சனம்


லாரி ஓட்டும் எளிய குடும்பத்து இளைஞன் குமாரும் (யுத்தன் பாலாஜி) வலுவான குடும்பப் பின்னணிக் கொண்ட பள்ளி மாணவி ஜனனியும் காதலிக்கிறார்கள். காதல் வெளியே தெரிந்ததும் பெண் வீட்டாரிட மிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்புகிறது. ஜனனியின் சித்தப்பா அரசியல்வாதி, அவளது அண்ணன் அவரால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட ரவுடி. இருவரும் இணைந்து குமாரைத் தீர்த்துக்கட்ட நினைக்கும்போது, அவர்களின் தாக்கு தலையும் எதிர்ப்பையும் காதலர்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதே கதை.

‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தில் துறுதுறு விடலைபையானாய் நாம் பார்த்த பாலாஜி தான், இதில் இன்னும் கொஞ்சம் பக்குப்பட்டிருக்கிறார்.. காதலுக்காக எந்த மெனக்கெடலும் இல்லாமல் இளையராஜா பாடல்களை வைத்தே காதையை உஷார் பண்ணும்போது ‘அட’ என ஆச்சர்யப்பட வைக்கிறார்.

இளையராஜாவின் ரசிகையாக வரும் தீக்‌ஷிதா பள்ளி மாணவியாகவும், கல்லூரி மாணவியாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். யோகிபாபு, பல சரவணன் இருவரும் இருப்பதால் பெரும்பாலான காட்சிகள் கலகலப்பாக நகர உதவி இருகின்றனர். தீக்‌ஷிதாவின் தந்தையான மாரிமுத்து, அரசியல்வாதி சித்தப்பாவான ரவி மற்றும் அண்ணன் முத்துக்குமார் உட்பட பலரும் தங்களது கதாபாத்திர தேர்வை நியாயப்படுத்துகின்றனர்..

படத்தில் பாடல்கள் ரசிக்கும்படி இருந்தாலும், பெரும்பாலும் இளையராஜாவின் பாடல்களும், இசையும் வருவதால் பவண் கார்த்திக்கின் இசை சற்று எடுபடவில்லை. காதலர்கள் இணைய இருந்த நேரத்தில் நிகழும் எதிர்பாராத திருப் பம் கடைசி 20 நிமிடங்களை விறு விறுப்பாக்கிவிடுகிறது. ஆனாலும் எதிர்பாராத திருப்பம் ஒன்றை நம்பி, அதை மட்டுமே ஒரே துருப்புச் சீட்டாக வைத்து நகரும் சம்பவங்களற்ற திரைக்கதையில் காட்சிகள் அனைத்தும் ஊகிக்கும் விதமாகவும் எதிர்பார்க்கும் வரிசையிலும் வந்துகொண்டேயிருப்பது திரைக்கதையின் பலவீனம் தான்.