ஒத்த செருப்பு – விமர்சனம்


தனக்கென புதிய பாதையில் பயணிக்கும் பார்த்திபனின் மற்றொரு புதிய முயற்சி தான் இந்து ஒத்த செருப்பு சைஸ் 7.

பார்த்திபன் காவல்நிலையத்தில் காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில் இருக்கிறார். மிகவும் நேர்மையான டி.சி மற்றும் முன்கோபக்காரரான ஏ.சி. ஆகியோர் பார்த்திபனை மிக தீவிரமாக விசாரணை செய்கின்றனர்.

இவ்வளவும் காவல்நிலையத்தின் உள்ளே நடக்க, காவல்நிலையத்திற்கு வெளியே பார்த்திபனின் மகன் இருக்கிறார்.
இந்த விசாரணையில் பல கொலைகளை பார்த்திபன் செய்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. இந்த கொலைகளை ஏன் செய்தார்? எப்படி செய்தார்? என்று சொல்வது படத்தின் மீதிக்கதை.

படம் முழுக்க பார்த்திபனின் முகம் தான். பார்த்திபனின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இந்தப்படத்தின் பார்த்திபன் புதுமையாக என்னதான் செய்திருக்கிறார்? என்ற ஆவலோடு வரும் ரசிகர்களை படம் நிச்சயம் கவரும்.

ரசூல் பூக்குட்டியின் துல்லியமான ஒலிப்பதிவு சூழ்நிலையை அழகாக உணர்த்துகிறது. இது படத்திற்கு மேலும் ஒரு ப்ளஸ் பாயிண்ட்.

இளையராஜாவின் பாடல்களை மிகச் சரியாக பின்னணியில் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் பார்த்திபன். சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது.

கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர் என அவதாரம் எடுத்துள்ள பார்த்திபன் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக வெளிவந்துள்ள இந்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம்.