படிப்பில் சுமாரான ‘பசங்க’ புகழ் கிஷோருக்கு அதே பள்ளியில படிக்கிற மேக்னா மீது காதல்.. காதல் கைகூட, பரீச்ட்சையில் பிடடித்து மாட்டிக்கொண்டு, அதனால் பள்ளியிலிருந்து நீக்கப்பட ஊரில் ஊதாரியாக சுற்றி திரிகிறார் கிஷோர். திடீரென ஒருநாள் கிஷோரின் காதலி மேக்னா, தங்கச்சி உட்பட சில மாணவிகள் காணாமல் போக கிஷோர் அவர்களை தேட ஆரம்பிக்கிறார். அந்த தேடலில் பல அதிர்ச்சியான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன.. அவை என்ன? கிஷோரால் அவர்களை கண்டு பிடித்து மீட்க முடிந்ததா என்பது மீதிக்கதை..
‘பசங்க’ படத்தில் சின்ன பையனாக பார்த்த கிஷோரை இதில் அதிரடி ஆக்ஷன் ஹீரோ ரேஞ்சுக்கு மாற்றியிருக்கிறார்கள்.. ஓரளவு யதார்த்தமான நடிப்பு, ஆக்ரோஷமான சண்டைகள்னு மனதில் பதிகிறார். கிஷோரோட காதலியாக வரும் மேக்னா, நண்பனாக வந்து கலகலக்க வைக்கும் ‘சூப்பர் சிங்கர்ஸ்’ நிகழ்ச்சி புகழ் அகிலேஷ் மற்றும் கை தென்னவன், காளி வெங்கட் என படத்தில் நடித்திருககும் பலரும் தங்களது கேரக்டருக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.
இசையமைப்பாளரா அறிமுகமாகியுள்ளற ஜூட் லெனிகரோட இசையில் பெரிய அளவில் குறை காணமுடியவில்லை. ஒளிப்பதிவாளர் பாண்டி அருணாசலம் கிராமத்து பின்னணியில் நடக்கும் இந்த கதைக்கு தனது ஒளிப்பதிவால் வலு சேர்த்திருக்கிறார்.
பள்ளி மாணவர்களின் குறும்புத்தனங்கள் என படத்தின் முதல் பாதியை கலகலப்பாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் அய்யனார். ஆனால் இடைவேளைக்கு பிறகு பாலியல் பலாத்காரம், ரத்தம் தெறிக்கும் கொடூர தாக்குதல்கள் பழிவாங்குதல்கள் என ரூட்டை மாற்றி திரைக்கதையை பயணிக்க வைத்திருப்பதால் இணைந்து பயணிப்பதில் நமக்கு தடுமாற்றம் ஏற்படவே செய்கிறது. மேலும் முதல் பாதி திரைக்கதையில இருந்த நேர்த்தி இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங் என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்..
பள்ளியில் படிக்கிற மாணவ, மாணவிகள் இடையே உருவாகும் காதல், வெறும் இன கவர்ச்சியே தவிர, அது நிஜ காதல் இல்லை என்பதையும் படிக்கும் வயதில் படிக்கவில்லை என்றால், வாழ்க்கை எப்படி மாறும் என்பதையும் மறைவான பகுதிகளில் தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி, பெண்களை கற்பழிக்கும் சமூக விரோத கும்பல் பற்றியும் டீடெய்லாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் அய்யனார்..