‘வீராபுரம் 220’ விமர்சனம்

கிராமத்தில் ஓட்டல் நடத்தி வரும் நாயகன் மகேஷின், தந்தை உள்ளிட்ட மூன்று பேர் மணல் திருடும் லாரி மோதி இறந்துவிடுகிறார்கள். இதனால், மணல் திருட்டை நிறுத்தும் நடவடிக்கையில் நாயகன் ஈடுபட, அதனால் ஏற்படும் பிரச்சனைகளும், அவற்றை நாயகன் எப்படி சமாளித்து சாதிக்கிறார் என்பதையும் சொல்வது தான் ‘வீராபுரம் 220’.

‘அங்காடித்தெரு’ படத்திற்கு பிறகு நடிகர் மகேஷ் ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறார். வேகமும், வீரமும் நிறைந்த கிராமத்து இளைஞராக வலம் வரும் மகேஷுன் நடிப்பு கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

நாயகியாக நடித்திருக்கும் மேக்னா, கொடுத்த வேலையை குறை வைக்காமல் செய்திருப்பதோடு, கூடுதல் அழகோடும் இருக்கிறார்.

படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் தங்களது வேலையை குறை வைக்காமல் செய்திருக்கிறார்கள்.

ரித்தேஷ் மற்றும் ஸ்ரீதர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. பி.எஸ்.பிரேம்குமாரின் ஒளிப்பதிவில் க்ளைமாக்ஸ் சேசிங் காட்சி மிரட்டுகிறது.

கதை எழுதி இயக்கியிருக்கும் பி.எஸ்.செந்தில்குமார், முதல் படத்திலேயே சமூக பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். திரைக்கதை மற்றும் காட்சிகளை கமர்ஷியலாக அமைத்திருந்தாலும், நல்ல மெசஜையும் படத்தில் சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘வீராபுரம்’ விஷயம் உள்ள படம்.