எஸ்கேப் ஆன கவுதம் கார்த்திக்-ப்ரியா ஆனந்த் ஜோடி..

ஒருபக்கம் சலசலப்பு எழுந்தாலும் இனொரு பக்கம் அது எதையும் கண்டுகொள்ளாமல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான வேலைகள் முழுமூச்சாக நடந்து வருகின்றன.. சில நாட்களுக்கு முன் இதில் பங்குகொள்ளும் அணிகள் பற்றியும் ஒவ்வொரு அணி வீரர்கள் பற்றியும் அறிவிப்பு வெளியிட்டனர்..

அதை கவனித்து பார்த்தவர்களுக்கு இரண்டு விதமான அதிர்ச்சிகள் ஏற்பட்டன. ஒன்று சீனியர் நடிகர் கார்த்திக் இந்த நட்சத்திர போட்டியில் கலந்துகொண்டு தனது பங்களிப்பை தருகிறார் என்பது ‘அட’ என சொல்ல வைக்கும் ஆச்சர்ய அதிர்ச்சி.

இன்னொன்று அதே கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கின் பெயர் எந்த அணியிலும் காணப்படவில்லை.. அதேபோல பல நடிகைகளின் பெயர்கள் காணப்பட்ட வேளையில் கவுதமுடன் நெருக்கம் காட்டிக்காட்டி சுற்றிக்கொண்டிருக்கும் ப்ரியா ஆனந்தின் பெயரையும் கூட லிஸ்ட்டில் காணோம்.. அப்பா கார்த்திக் கிரிக்கெட் விளையாடும்போது, மகனுக்கு விளையாட தெரியாதா என்ன..?

அதேபோல நம்ம ஊரில் நடிகர் சங்கம் கட்டுவதற்கு மும்பை நடிகைகள் வரிந்துகட்டிக்கொண்டு பெயர் கொடுத்திருக்கும்போது தமிழ் நடிகை என பீற்றிக்கொள்ளும் முத்தின நடிகையான பிரியா ஆனந்த் இடம்பெறாததும் இன்னொரு அதிர்ச்சி..

ஆனால் விசாரித்ததில் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்கெடுத்தால், பயிற்சி, போட்டி என கலந்து கொள்ளும்போது தங்களது ரொமான்ஸ் விவகாரம் வெளியே கசிந்துவிடலாம் என்பதால் சமயோசிதமாக இந்த ஜோடி பெயர் கொடுக்காமல், ஏதோ காரணம் சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அடக்கடவுளே..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *