அஜித்தை பொறுத்தவரை, ஒருபோதும் புது இயக்குனர்களின் படத்தில் நடிப்பதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறார். (விஜய்கிட்ட மட்டும் என்ன வாழுதாம்..?) குறிப்பிட்ட நான்கு இயக்குனர்களின் படங்களில் மட்டும் மாற்றி மாற்றி நடிப்பது என்று அதிலும் கூட ஒரு சூப்பர் பாலிசி வைத்திருக்கிறார். விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா, கௌதம் மேனன் என இயக்குனர்களை வரிசை கட்டியவர் அடுத்து இப்போது மீண்டும் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் அல்லது மீண்டும் விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க இருக்கிறார் என்றுதான் நீண்டநாளாக பேச்சு ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் வீரம் படம் ஓரளவு ஓடியதாலும், தற்போது நடித்துவரும் ‘வேதாளம்’ படமும் பரவாயில்லாமல் ஓடி மானத்தை காப்பாற்றும் என்பதாலும் அடுத்த படத்தையும் சிவாவையே இயக்கச்சொல்லலாம் என நினைத்த அஜித் அவரிடம் கேட்டும் விட்டாராம்..
“ஆஹா பேஷா பண்ணிடலாம்” என சந்தோசம் காட்டிய சிவா, “அதுல பாருங்க… நான் இன்னொரு ஹீரோவுக்கு ஒரு கதை சொல்லி ஒகேயும் பண்ணி வச்சுட்டேன்.. அத பாதில கழட்டிட்டு வந்தா நன்னா இருக்காது. செத்த வெயிட் பண்ணுங்கோ.. அத முடிச்சுட்டு வந்து நாம ஜாய்ன் பண்ணிக்கலாம்” என பதில் சொல்லிவிட்டாராம். என்ன இருந்தாலும் ‘அஜித் ’யையே வெயிட்டிங் லிஸ்ட்டில் போட ஒரு மன தைரியம் வேண்டும் இல்லையா..? அதில் கெத்து காட்டிவிட்டார் சிவா.