தற்போது விக்ரம் கே.குமார் இயக்கத்தில் ‘24’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.. இந்தப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்து வருகிறது.. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தவேண்டியது பாக்கி. படத்தை ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியிடலாம் என திட்டம் வைத்துள்ளாராம் சூர்யா.
இதுமட்டுமல்லாமல், சூர்யா தானே தயாரித்ததோடு அல்லாமல் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள பாண்டிராஜின் ‘பசங்க-2’ படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் வாங்கி வெளியிடுவதால் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால் ‘24’ படத்தை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தான் வெளியிட இருக்கிறதாம்.
அந்த சமயத்தில் அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி’ ஆகிய படங்களை வாங்கி நட்டப்பட்டவர்கள் போர்க்கொடி தூக்கி சிக்கலை எழுப்பாமல் இருக்க, அவர்களை அழைத்துப்பேசி, அவர்களுக்கு நட்டத்தை சரிக்கட்டும் வகையில் ஏற்பாடுகளை செய்து, அந்தவித சர்ச்சையும் இன்றி படத்தை வெளியிடவேண்டும் என சூர்யா முடிவு செய்துள்ளாராம். எனவே அதற்கான வேலைகள் இப்போதே ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகின்றனவாம்.