நயன்தாராவே நடிச்சுட்டார்.. ஹன்ஷிகாவுக்கு மட்டும் கசக்கவா செய்யும்..?

அதிமுகவில் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பதவி கிடைக்கலாம் என்பதுபோல, அறிமுக ஹீரோயின்களுக்கு ஒரு வசதி, பெரிய ஹீரோவுடன் ஜோடிசேரும் வாய்ப்பு அறிமுகப்படத்திலேயே கிடைக்கவும் செய்வதுதான்.. அடுத்து அவர்கள் சின்ன ஹீரோக்களுடன் நடிப்பார்கள் என்கிறீர்கள். ம்ஹூம்.. அஜித், விஜய் கூட தான் ஜோடி என ரேஞ்சே மாறிவிடும்..

ஆனால் செக்கன் லெவலில் வளர்ந்துவரும் ஹீரோக்களுக்கோ மூன்று ஹிட் கொடுத்தாலும் கூட நாலாவது படத்தில் ஜோடியாக நடிக்க ஒரு பிரபல ஹீரோயின் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. ‘மான் கராத்தே’வில் சிவகர்த்திகேயனுடன் ஜோடி சேர்வதற்கு ஆரம்பத்தில் அவ்வளவு பிகு காட்டினாராம் ஹன்சிகா.

ஆனால் இப்போது நானும் ரௌடி தான்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க, நயன்தாரா எந்தவித பந்தாவும் இல்லாமல் ஒப்புக்கொண்டதும் அவர்கள் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனதையும் பார்த்தால், இனி பிரபல கதாநாயகிகள் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதில் தயக்கம் காட்டமாட்டார்கள் என்றுதான் தெரிகிறது. .

நானும் ரௌடி தான் வெற்றியை தொடர்ந்து தனுஷ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி.. இந்தப்படத்தை தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா தனுஷ் இயக்க இருப்பதாகவும், இதில் கதாநாயகியாக ஹன்ஷிகா நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாராவே நடிச்சுட்டார்.. ஹன்ஷிகாவுக்கு மட்டும் கசக்கவா செய்யும்.. வீண் பந்தா வேலைக்கு ஆகாது என்று உடனே ஒப்புக்கொண்டாராம் ஹன்ஷிகா.