அடுத்த படத்திலாவது டை அடிப்பாரா அஜித்..? ; பொது ரசிகர்கள் ஏக்கம்..!

அஜித் நடிக்கும் படத்தில் அவர் எப்படி கெட்டப்பில் வந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு சந்தோசம் தான்.. சொந்த வீட்டு சாப்பாட்டை நாமே குறைசொல்ல கூடாது என்பதுதான் காரணம். ‘மங்காத்தா’ படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடித்தார் அஜித். அதற்கேற்ற மாதிரி படத்தில் தனது வயது நாற்பது என்றும் குறிப்பிட்டார்.

ரைட் ஒகே.. அதனால் முடி அங்கங்கே நரைத்திருப்பது அந்த வயதிற்கு சரிதான் என பொதுவான ரசிகர்கள் சமாதானம் ஆனார்கள்.. அடுத்து, ‘ஆரம்பம்’, பின்னர் ‘வீரம்’ என எல்லாவற்றிலும் அதே கெட்டப் தொடர்ந்து, இதோ இப்போது ‘வேதாளம்’ படத்திலும் அதே சால்ட் அன்ட் பெப்பர் லுக் தான் என்றால் மற்ற ரசிகர்கள் பாவம் இல்லையா..?.. என்னதான் இருந்தாலும் ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது இல்லையா..?

படத்தின் கேரக்டருக்கு ஏற்ப கெட்டப்பை மாற்றும்போது இளைஞன் என்றால் முடியை டை அடிக்கும்படி படத்தின் இயக்குனர்களும் அஜித்திடம் வலியுறுத்த வேண்டும்.. ஆனால் அவர்களும் அஜித்துடன் சேர்ந்துகொண்டு உங்களுக்கு இந்த லுக்கே நல்லா இருக்கு சார் என ஏற்றிவிட்டால் போப்போக அவரது ரசிகர்களுக்கே அது போரடித்து விடும்..

ரஜினியை பாருங்கள்.. லிங்காவில் யூத் கெட்டப்.. அதற்காக நரைமுடியோடோ அல்லது அவரது ஒரிஜினல் ஹேர்ஸ்டைலோடோவா (?) வந்தார்… இல்லையே. இதோ இப்போது கபாலியில் வயதான கேரக்டர்.. அதற்கேற்ற வெள்ளைத்தாடி கெட்டப்புடன் படு கம்பீரமாக இருக்கிறார்.

அடுத்த படத்திலாவது அஜித் இதை உணர்ந்துகொள்ளவேண்டும்.. இல்லை அவரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்கள் அவருக்கு உணர்த்த வேண்டும்..